கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க தனி கவனம் - எஸ்.பி. பத்ரிநாராயணன்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (13:28 IST)
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மாவட்டத்தில் சுமார் ரூ.1.9 கோடி மதிப்பிளான 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 330 பேரிடம் நன்னடைபிணை பெறப்பட்டுள்ளது. 
 
15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல கடந்த 3 மாதங்களில் 126 குற்றச்சம்பவங்கள் நடைபெற்று அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிளான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
இதுவரை மாவட்டத்தில் நடந்த 53 கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 44 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 56 போக்ஸோ வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 26 வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 
 
மேலும் போதை பெருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 120 கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தனியாக எனக்கு போதை வேண்டாம் கிளப்கள் துவங்கப்பட உள்ளது என மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்