ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (15:31 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார். இதுகுறித்து புகழேந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
 
இந்த வழக்கின் விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாலர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
புகழேந்தி நீக்கம் குறித்து நீதிமன்றத்தில் நேரடியாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் வரும் 24ம் தேதி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்