எனக்கு ஆதரவு தந்த கமல்ஹாசனுக்கு நன்றி: சூரப்பா

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (14:01 IST)
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அது குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்தது என்பதும் அந்த கமிஷன் தற்போது விசாரணை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று திடீரென கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நேர்மையாக வேலை செய்து கொண்டிருந்த சூரப்பாவுக்கு தனது முழு ஆதரவு என்றும் தெரிவித்திருந்தார் 
 
அந்த வீடியோவில் அவர் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மட்டும் அமைச்சர்களின் ஊழல் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது தனக்கு ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூரப்பா 
 
என்னுடைய நேர்மைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆதரவு அளித்தது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். மேலும் நான் பஞ்சாப் மாநிலத்தில் ஐஐடி இயக்குனராக இருந்தபோது அம்மாநில அரசு என்னிடம் கல்விசார்ந்த ஆலோசனைகளை கேட்கும் என்றும் ஆனால் தமிழக அரசு அப்படி ஒன்றும் கேட்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார் 
சூரப்பாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்