விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (10:45 IST)
தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌ என உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார்.‌

 
பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை, வழங்கிய கார்டுகள் எத்தனை? என கேள்வி எழுப்பட்டது. இதற்கு அமைச்சர்  சக்கரபாணி பேரவையில் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
 
குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌. முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ 2021 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ 7 ஆம்‌ தேதி பொறுப்பேற்றவுடன்‌, 2021 மே மாதம்‌ முதல்‌ கடந்த 14 ஆம்‌ தேதி வரை 10 மாதங்களில்‌ 15,74,543 விண்ணப்பங்கள்‌ குடும்ப அட்டை வழங்ககோரி பெறப்பட்டது.
 
இது பரிசீலிக்கப்பட்டு பின்னர்‌ தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்‌ 10,92,064 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்‌ வழங்கி சாதனை படைத்திருக்கிறது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்