தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னடர்கள்: சிம்பு ப்ளான் சக்சஸ்!

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (11:41 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்ககூடாது எனவும் எதிர்ப்புகள் கிளம்பியது. 

 
நடிகர் சிம்பு கடந்த ஞாயிற்றுகிழமை நடிகர் சங்கத்தால் நடத்தப்பட்ட அறவழி போராட்டத்தை புறக்கணித்தார். அதன் பின்னர், அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் தொடா்பாக கருத்து தெரிவித்தார். அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்கின்றனா். வாக்குகளுக்காகவே அரசியல் கட்சிகள் காவிரி பிரச்னையைக் கையில் எடுக்கிறார்கள். 
 
காவிரி நீரை தமிழகத்திற்கு தர கூடாது என கர்நாடகாவை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள். கர்நாடகா மக்கள் அனைவரின் கருத்து அதுவல்ல. காவிரி பிரச்சனையை வைத்துதான் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அரசியல் நடக்கிறது. 
இதனை உணா்ந்து கன்னட மக்கள் தமிழா்களுக்கு 11 ஆம் தேதி ஒரு டம்ளா் தண்ணீா் கொடுக்க வேண்டும். அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவே இணையத்தில் பதிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
சிம்புவின் வேண்டுகோளை ஏற்று கன்னட மக்கள் பலர் தமிழர்களுக்கு தன்ணீர் வழங்கி அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
சிம்புவின் இந்த ஐடியா வெற்றி பெற்றதோடு #UniteForHumanity #STR #Simbu #SpreadLove #Kannadigas போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்