அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் பதில் சொல்ல தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:41 IST)
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் பதில் சொல்ல தயார் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழக மின்வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை காட்டினால் அவருக்கு நான் பதில் சொல்ல தயார் என்றும் ஆதாரமில்லாத அவருடைய குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மத்திய அரசு எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் தமிழக அரசு எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்றும் இரண்டுக்கும் ஏன் இந்த வித்தியாசம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் 
 
சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து அண்ணாமலை ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் அதற்கு ஏன் அவர் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்