போற போக்குல கொரோனா என்னை டச் பண்ணிடுச்சு: அசால்டு பண்ணும் செல்லூரார்!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (14:08 IST)
கொரோனா சிகிச்சை முடிந்து தற்போது பொதுப்பணியை துவங்கியுள்ள செல்லூர் ராஜூவுக்கு அதிமுகவினர் தடபுடல் வரவேற்பு. 
 
தமிழகம் முழுவதும் மக்களிடையே கோர தாண்டவமாடி வரும் கொரோனா அரசியல் பிரமுகர்களையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. அதிமுக அமைச்சர்களான கே.பி அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை வரவேற்கும் விதத்தில் மதுரை பகுதிகளில் “மதுரை மீண்ட சுந்தரபாண்டியரே” என அவரை வாழ்த்தி அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் ட்ரெண்டாக்கப்பட்டன. 
 
பின்னர் செல்லூர் ராஜுவுக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், போகிற போக்கில் கொரோனா என்னை டச் பண்ணி போய்விட்டது. தற்போது நானும் என் மனைவியும் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துவிட்டோம். இனி பொதுப்பணியில் ஈடுபட உள்ளேன் என தெரிவித்தார். 
 
அதிமுக அமைச்சர்களில் மக்களிடையே அதிகமாக பேசப்படும் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக செல்லூர் ராஜூ இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்