பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா? – டாஸ்மாக் அளித்த விளக்கம்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:33 IST)
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானம் விற்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசின் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மதுபான வகைகள், பீர் வகைகள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும், இதனால் சுற்றுசூழல் மேலும் சீர்கேடு அடையும் என்றும் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் விளக்கம் அளித்துள்ள டாஸ்மாக் நிறுவனம், “மதுபானங்களை கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவை சேர்ந்தது. எனினும் இதுவரை பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கண்ணாடி பாட்டில்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்