நிகழ்ச்சி மேற்பார்வை மற்றும் விருந்தினர் உபசரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து வந்தார். விழாவை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இதற்காக உதயநிதி அழைக்கப்பட்டபோது அவர் ஓடி வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதுபோல உதயநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பலரும் ட்விட்டரில் #ThankYouUdhayAnna என்ற ஹேஷ்டேகையும் பதிவு செய்துள்ளனர்.
விழாவில் மற்றுமொரு ஹைலைட் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள். காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பாரபட்சம் இல்லாமல் அனைத்து முதல்வர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தது. பெரியார் குறித்து வெளியிடப்பட்ட காணொளியும் பலரின் கவனத்தை ஈர்த்தது. பெரியார் குறித்த இந்த காணொலிக்கு நடிகர் கமல்ஹாசன் பிண்ணனி குரல் பேசியிருந்தார்.