காவல் நிலையத்தில் கழிவறையில் வழுக்கி விழுந்த சீர்காழி கொள்ளையர்கள்

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (13:33 IST)
சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை கொன்ற இரண்டு பேரும் காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளனர். 

 
சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை கொன்று 17 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளை கும்பலை போலீஸார் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர். கொள்ளையர்களை விரட்டி செல்கையில் ஒரு கொள்ளையன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டான்.
 
கைதானவர்களை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ரமேஷ், மணீஷ் என்ற இரண்டு பேரும் காவல்நிலையத்தில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளனர். இதையறிந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்