நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் நீட் தேர்வு முவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக திரிப்புராவில் சுமார் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக நீட் தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதேபோல் உபி., தெலுங்கானா மாநிலங்களிலும் இந்தக் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்.ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாகப் புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வு மட்டுமே தகுதியெனில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நீக்கிவிடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நீட் தேர்வில் ஏமாற்று வேலைகள் நடப்பாதால் அதை எதிர்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கனவைச் சிதைக்கும் என்பது இந்த ஆண்டு நிரூபணம் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.