கமல் முதல்வர் வேட்பாளரா? ஜெயகுமார் கிண்டல்!

சனி, 17 அக்டோபர் 2020 (13:31 IST)
அமைச்சர் ஜெயகுமார் கமலஹாசன் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை விமர்சித்துள்ளார். 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமலஹாசன் ஏற்கனவே ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சந்திக்க இருக்கும் நிலையில் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமலஹாசன் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்த கூட்டணி முடிவுகளை எடுக்கும் அனைத்து அதிகாரமும் கமல்ஹாசனுக்கு உண்டு என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசன் பிக் பாஸின் பி.ஆர்.ஆர். அவரை நான் பிக்பாஸ் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன். கடந்த ஆறு மாதமாக எங்கு சென்று ஒளிந்து விட்டு இப்போது வந்தவுடன் முதல்வர் வேட்பாளராக வருகிறார். அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்