'புரட்சி தமிழர்’ பட்டம் நடிகர் சத்யராஜ்-க்கு மட்டுமே: சீமான்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (16:02 IST)
புரட்சித் தமிழர் பட்டம் சத்யராஜ் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் என்றும் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
எல்லோரும் தங்கள் பெயருக்கு முன்பு புரட்சியை சேர்ப்பதால் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும் நடிகர் சத்யராஜ் மட்டுமே புரட்சி தமிழன் பட்டத்திற்கு உரியவர் என்றும் அதிமுகவின் மதுரை மாநாடு அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார். 
 
சமீபத்தில் நடந்த மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் கொடுத்ததை தான் சீமான் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் புரட்சித்தமிழர் பட்டம் தனியரசுக்கு மட்டுமே சொந்தமானது என கொங்கு இளைஞர் பேரவை கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்