அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி புரட்சித்தமிழர் என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு என்றால் எம்ஜிஆர் மலையாளி, ஜெயலலிதா கன்னடம் நான் மட்டும்தான் தமிழர் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரா என்று தோன்றுகிறது என்று தெரிவித்தார்.