நாங்க போராடிகிட்டு இருக்கோம்! ரஜினி கேசினோ விளையாடறார்: சீமான் கிண்டல்

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (22:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் பரிசோதனை செய்ய கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அவருக்கு உதவியாக அவரது மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் உடன் சென்றுள்ளார். உடல் பரிசோதனை நேரம் போக மீதி நேரம் அவர் நண்பர்களுடன் உரையாடுதல், அரசியல் ஆலோசனை செய்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்.



 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு கிளப்பில் கேசினோ விளையாடி கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியின் சீமான், 'நாங்கள் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம், ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார். அது முதலாளிகளின் விளையாட்டு, எனவே அதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது' என்று கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்