கருப்பாக இருக்கும் எருமைமாடு திராவிடர்களா? சீமான் கேள்வி

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:53 IST)
கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடர்களா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் திராவிடர்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள அனைவரும் திராவிடர்களா?  கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார் 
 
ஒரு மனிதனுக்கு ஏன் இத்தனை முகமூடி போடுகிறீர்கள் என்றும், திராவிடர்கள் இந்தியர்கள் தமிழர்கள் என பல்வேறு முக அடையாளம் எதற்கு, நாம் தமிழர்கள் என்று கூறுவதற்கு தயங்குவது ஏன்? என்றும் எதற்காக திராவிடர்கள் என்று கூற வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்