பிப்ரவரில் பள்ளி & திருப்புதல் தேர்வு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (09:43 IST)
பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில்  பிப்ரவரி பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். அப்படி பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்