கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை?

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (08:01 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று  கனமழை காரணமாக  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் சாருஷ்டி அறிவித்துள்ளர்.

ஆனால் கோவையில் மிதமான மழை பெய்து கொண்டிருந்தாலும் இன்று வழக்கம் போல் பள்ளி கல்லூரி இயங்கும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  

கனமழை காரணமாக இன்று திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்