அடித்து வெளுக்கும் மழை: இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (08:23 IST)
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

 
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பொழிவின் காரணமாக இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றும் மழையின் காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்