ஜனவரி 27ம் தேதி சசிகலா சிறையிலிருந்து ரிலீஸ்

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (19:50 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, வரும் பிப்ரவரி மாதம் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆர்.டி.ஐ தகவலில் இருந்து தெரியவந்தது
 
இந்த நிலையில் தற்போது அதே ஆர்.டி.ஐ கேள்விக்கு பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. சிறையில் இருக்கும் சசிகலா எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்.டி.ஐ, ஜனவரி 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் அளித்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சிறையில் இருந்து சசிகலா ரிலீஸ் ஆனால் அதிமுகவின் நிலை என்னவாகும்? அதிமுக இரண்டாக பிரிந்து ஒரு பிரிவு சசிகலா பக்கம் செல்லுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் மொத்தத்தில் இன்னும் ஆறு மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் சசிகலாவின் விடுதலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்