வேதா நிலையத்திற்கு போட்டியாக பெரிய வீட்டை கட்டி எழுப்பும் சசிகலா!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:44 IST)
போயஸ் கார்டன் சாலையில் சசிகலா ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டப்போவதா தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் உள்ளது. அதற்கான பணிகளும் துரிதமாக நடைப்பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அடுத்த ஆண்டில் தேர்தலுக்கு முன்னர் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தகவல் என்னவெனில் சசிகலா போன்றே அதன் அருகில் பெரிய வீடு ஒன்றை கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், போயஸ் கார்டன் சாலையில் சசிகலா ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டப்போவதாவும் தற்போது கொரோனா காரணமாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்