சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா அடுத்த ஆண்டில் தேர்தலுக்கு முன்னமே விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலா விடுதலையான பின்பு தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்னமே விடுதலை ஆவார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
ஆனால் இப்போது சசிகலா ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னதாக வெளியாவதை தானே விரும்பவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு கொரோனா வைரஸ் பரவல் அச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், தனது விடுதலை மிக பிரம்மாண்டமாக தொண்டர் படை சூழ இருக்கவேண்டும் என அவர் விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் சசிகலாவின் ஜோதிடரின் கணிப்புப் படி செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனால் அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.