போயஸ் இல்லத்தில் சசிகலா மீட்டிங்.. அதிமுக பிரமுகர்கள் சந்திப்பார்களா?

Siva
வியாழன், 13 ஜூன் 2024 (08:42 IST)
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் இனியும் அதிமுக அழிவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சசிகலா சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதிமுகவின் முக்கிய தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களை வரும் 16ஆம் தேதி போயஸ் இல்லத்தில் சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒரு சிலரின் சொந்த வெறுப்பு வெறுப்புகளுக்காக கட்சி அழிவதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் உடனடியாக கட்சியை மீட்டு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் நலன் கருதி, மக்கள் நலன் கருதி, கட்சியில் இருந்த பிரிந்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சசிகலா எடுக்கும் முயற்சிதான் இந்த மீட்டிங் என்று கூறப்படுகிறது. ஜூன் 16ஆம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பின்போது அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி சில பிரபலங்கள், முன்னாள் அமைச்சர்கள் வருகை தர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்