தேர்தல் தோல்வி ஏன்? அண்ணாமலை செயல்பாடு எப்படி? வானதி, பொன்னாரிடம் விளக்கம் கேட்ட பாஜக..!

Mahendran

புதன், 12 ஜூன் 2024 (18:04 IST)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், தோல்விக்கு விளக்கம் கேட்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தமிழக பாஜக தலைவர்களுக்குகடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகம், புதுவை என 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கோயல், தமிழகத்தில் தோல்வி ஏன் என்பது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் அந்த கடிதத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு எப்படி உள்ளது? என்றும் அவர் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் எந்த விதமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார் என்றும் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரும் கட்சி மேல் இடத்திற்கு அண்ணாமலை குறித்து அறிக்கை அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்