சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவை தலைவரை சந்திக்க ஈபிஎஸ், சசிகலா ஒரே நேரத்தில் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுசூதனனை சந்திக்கு சசிக்கலா தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதற்கு சில நிமிடங்கள் முன்னதாக எடப்பாடி பழனிசாமி மதுசூதனனை சந்திக்க உள்ளே சென்றார். சசிக்கலா சிறையிலிருந்து வந்த பிறகு முதன்முறையாக இருவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.