சசி பெருமாளின் மகளது படிப்பு செலவை பாமக ஏற்கும்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2015 (11:28 IST)
மது ஒழிப்பிற்காகப் போராடி உயிரிழந்த சசி பெருமானிள் மகளது படிப்பு செலவை பாமக ஏற்றுக்கொள்ளும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
மதுஒழிப்பிற்காகப் போராடி உயிரிழந்த காந்தியவாதி சசி பெருமாளின் வீட்டிற்குச் சென்ற பாமக இளைஞரணிச் செயலாளர் அன்பு மணி ராமதாஸ் குடும்பத்தினருக்கு அறுதல் கூறினார்.
 
பின்னர் சசி பெருமாளின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, சசி பெருமாளின் மகளது படிப்பு செலவு முழுவதையும் பாமக ஏற்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.
 
சசி பெருமாளின் குடும்பத்திற்கு திமுக, தேமுதிக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நிதியுதவி வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.