நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள்: சரத்குமார் வாழ்த்து

Siva
திங்கள், 2 செப்டம்பர் 2024 (18:50 IST)
பாரீஸில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான  17வது பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று நாட்டிற்கும் வீட்டிற்கும்  பெருமை தேடித் தந்துள்ளனர் என சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகரா தங்கப் பதக்கமும்,
மோனா அகர்வால் வெண்கலப் பதக்கமும், 10 மீ ஏர் ரைபிள் எச்.எச்.1. பிரிவில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கமும், 10மீ ஏர்பிஸ்டல் போட்டியில் மனீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கமும், 100மீ,மற்றும்  200 ஓட்டப் பந்தயத்தில் பிரீத்தி பால் வெண்கல பதக்கமும், வீரர் நிஷாத் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கமும், வென்றிருக்கிறார்கள்.
 
வில் வித்தைப் பிரிவில் கைகள் இல்லாமல் பங்குபெறும் முதல் போட்டியாளர் என்ற அளவில் பாராட்டு பெறும், இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவியின் திறமை சிலிர்ப்பூட்டுகிறது. 
 
தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மற்றும் வீராங்கனைகளான சிவரஞ்சன் சோலைமலை, நித்யஸ்ரீசிவன், துளசிமதி முருகேசன் ஆகியோர் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்
கொள்கிறேன்.
 
இன்னும் வரும் காலங்களில் பல வீரர், வீராங்கனைகள் உருவாகி, நமது பதக்கக் கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்