புதிய அணி உருவாகும் - சவுண்டு விட்ட சரத்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (12:03 IST)
புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேட்டி. 

 
சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இன்று அல்ல இரண்டு சீட் ஒதுக்கப்படுவதற்காக அதிமுகவில் இருக்க முடியாது. அதிமுக கூட்டணியில் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
சின்னத்திரையில் இருந்து படிப்படியாகவிலகப் போவதாக அறிவித்துள்ள ராதிகா அவரது கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ராதிகா பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்