ரஜினிகாந்துக்கு ஆதரவா? - சகாயம் ஐ.ஏ.எஸ் விளக்கம்

Webdunia
திங்கள், 22 மே 2017 (18:17 IST)
நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு அளிப்பதாக தான் கூறவில்லை என சகாயம் ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? என சகாயம் ஐ.ஏ.எஸ் கேள்வி எழுப்பியதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியது. ஆனால், சகாயத்தின் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
“நல்லதொரு தமிழ் சமூகத்தை உருவாக்குவதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறேன். ரஜினிகாந்திற்கு ஆதரவு அளிப்பதாக நான் எங்கேயும் கூறவில்லை” என அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்