சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Siva

வியாழன், 2 ஜனவரி 2025 (18:08 IST)
சென்னை மலர் கண்காட்சிக்கு ₹150 நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மேலும் அதிகரிப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, படகு, கார் உள்ளிட்ட வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
 
இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என்றும், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.
 
முதலில், பெரியவர்களுக்கு ₹150, சிறியவர்களுக்கு ₹75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ₹200, சிறியவர்களுக்கு ₹100 என்றும், கேமரா எடுத்து வந்தால் ₹500 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் மலர் கண்காட்சியை பார்க்க வந்தால் ₹800 நுழைவு கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்