ரஜினிகாந்த் பேசியது வருத்தமளிக்கிறது - டிடிவி தினகரன் !

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (16:58 IST)
சமீபத்தில் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என ரஜினி மற்றொரு பேட்டியில் தெரிவித்தார்.
இதனால் ரஜினிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ரஜினி வீட்டுக்கு எதிராக நேற்று பெரியார் ஆதரவாளர்கள் சிலர் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் மீது ஆவேசமாக பேசிய பெரியார் ஆதரவாளர்கள் சிலர், ‘ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உயிரோடு நடமாட முடியாது என்றும் அவரது கையை வெட்டுவோம் என்றும் இந்த போராட்டம் இதோடு நிற்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து  , சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது :
 
தலைவர்கள் பற்றி பேசும் போது, உரிய   தகவல்களை அறிந்துகொண்டுதான் பேச வேண்டும்.பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது வருத்தமளிக்கிறது. அவர் பேசிய கருத்துகள் கண்டனத்திற்குரியவை 
 
மேலும், பெரியார் என்பவர் தனி மனிதரல்லர். அவர் ஒரு இயக்கம்; உடன் இருக்கும் தமிழருவி மணியன் போன்றோரிடம் கலந்தாலோசித்து ரஜினி பேசியிருக்கலாம்  என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்