சந்தேகப்படும்படி பேசிக்கொண்டிருந்த 4 பேர்.. பயங்காரவாதிகளுடன் தொடர்பு..! மடக்கி பிடித்த போலீஸ்

Arun Prasath

வியாழன், 23 ஜனவரி 2020 (15:44 IST)
எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு மற்றும் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 3 பேரை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சந்தேகிக்கும்படி 4 பேர் பேசிக்கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது

அதன் பின்பு போலீஸார் மைதானத்திற்கு சென்றபோது அந்த நான்கு பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போலீஸார். ஷேக் தாவூத் என்பவர் தப்பி ஓடிய நிலையில் பிச்சைக்கனி, முகமது அலி, அமீர் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்கள் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் தொடர்புடையவர்களுக்கு பணி உதவி செய்ததாகவும், அவர்களின் இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவிய முகமது ரிபாஸ் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் செல்ஃபோன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் அவதூறு பரப்பியதாகவும் கூறப்படுகிறது.

தப்பியோடிய ஷேக் தாவுத் மீது முன்னதாகவே பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிடிப்பட்ட 3 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்