மதுமிதாவுக்கு ஆதரவாக களமிறங்கும் எஸ்.வி.சேகர் – கமல்தான் காரணமா?

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (14:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து போலீஸ் விசாரணை தேவை என கூறியிருக்கிறார் பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 தமிழகத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்று வந்த திரைப்பட நடிகை மதுமிதா திடீரென வெளியேறியுள்ளார். அங்கிருந்த மற்ற போட்டியாளர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அதுகுறித்து பிக்பாஸ் தொடரில் எதுவும் காட்டப்படவில்லை. மதுமிதா வெளியேறிய பிறகு கமலுடன் பேசிய காட்சியில் அவரது கையில் கட்டுப்போடப்பட்டிருந்தது. அது ஏன் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பிக்பாஸ் குழுவோ, மதுமிதாவோ எந்த செய்தியும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் “மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா?

ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை.” என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டில் பேசியதால், அவரை குறி வைத்து எஸ்.வி.சேகர் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளாரா என்று அரசியல் வட்டாரத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்