மாற்றுத்திறனாளிகளிடம் நடந்து கொள்வது எப்படி? நடத்துனருக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (17:29 IST)
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது
 
மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் சரியாக கண்காணிக்க வேண்டும்
 
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணிகளை அன்புடன் நடத்த வேண்டும்
 
மாற்றுத்திறனாளி பயணிகளிடம் கோபமாக, ஏளனமாக, இழிவாக பேசக்கூடாது
 
பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடக்கூடாது
 
மாற்றுத்திறனாளி பயணிகளை மாநிலம் முழுவதும் 75 சதவீத கட்டணச் சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்