பொங்கல் பண்டிக்கை சிறப்பு பேருந்துகள்! – 100 கோடிக்கு மேல் வருமானம்!

வியாழன், 20 ஜனவரி 2022 (11:03 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருமான கிட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிக்கை 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. 16ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்று மக்கள் வீடுகளிலேயே காணும் பொங்கலை கொண்டாடினர். தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

கடந்த 11,12,13 ஆகிய பண்டிக்கைக்கு முந்தைய மூன்று நாட்களும், 17,18,19 ஆகிய பிந்தைய மூன்று நாட்களுமாக மொத்தம் 6 நாட்களில் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தமாக 9.5 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகள் மூலமாக பயணித்ததில் ரூ.112 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்