ரேசனில் ரூ.1000 ....குடும்பத்தலைவிகள் ஆர்வம்!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (16:44 IST)
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.

இந்நிலையில்  இன்று அமைச்சர் பெரியசாமி, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, 14 வகை மளிக்கைப் பொருட்கள், ரூ.4000 கொரொனா நிவாரண நிதி கொடுத்துள்ளதால் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து விரையில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்