கள்ளச்சாராயம் விற்றதாக கைதானவருக்கு அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து...!

Webdunia
புதன், 17 மே 2023 (10:26 IST)
கள்ளச்சாராயம் விற்றவருக்கு கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட நிவாரண தொகை வழங்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சுட்டிக் காட்டியதை அடுத்து சாராயம் விற்றவருக்கு அறிவிக்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு விஷ சாராயம் மரணங்களில் தொடர்புடைய சாராய வியாபாரி அமாவாசை என்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிவார தொகை வழங்கப்பட்டது. இவர் தானும் சாராயம் குடித்தவர்களில் ஒருவர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு இந்த தொகை வழங்கப்பட்டது.

இதையடுத்து தான் அவர் சாராயம் விற்றவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை ஆகியோர் ‘சாராயம் விற்ற அமாவாசை என்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதா? என சுட்டிக்காட்டிய நிலையில் தற்போது சாராய வியாபாரி அமாவாசைக்கு அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் நிவாரண தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்