வங்கக்கடலில் தாமதமாகிறதா காற்றழுத்த தாழ்வு? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Mahendran

திங்கள், 16 டிசம்பர் 2024 (10:11 IST)
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு உருவாவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று நேற்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், இதுவரை காற்றழுத்த தாழ்வு உருவாகவில்லை. இன்று காலை நிலவரப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் தான் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு உருவாகிய பின்னர், அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவானால், நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை சென்னை முதல் புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்