தமிழகத்தில் ஏற்கனவே பொங்கலுக்கு தேவையான அரிசி கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் பொங்கல் பரிசாக ரூபாய் 500 வழங்கப்படும் என்றும் இந்த பணம் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரியில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வெல்லம் மற்றும் பொங்கல் தொகுப்புகளுக்கு பதிலாக ரேஷன் கார்டுகளுக்கு தலா 500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முன்பாக அனைவரும் வங்கி கணக்கிலும் இந்த பணத்தை வரவு வைக்க புதுசேரி அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வேட்டி புடவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது அரிசி வெல்லம் மற்றும் பொங்கல் தொகுப்பாக கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் இதே போல் ஒரு அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்