மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி

புதன், 3 ஜனவரி 2024 (20:44 IST)
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது பஞ்சாப் உயர்நீதிமன்றம்.
 
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் கவுர் என்பவரின் நிலம் மத்திய அரசால்  கடந்த 1987 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த நிலத்திற்கு வழங்கிய இழப்பீடு போதுமானதல்ல என்று  அவர் குர்தாஸ்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . அவருக்கு கூடுதல் இழப்பீடும், தாமதத்திற்கு வட்டியும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

.இதை எதிர்த்து,. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பஞ்சாம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை தள்ளுபடி செய்து குர்தாஸ்பூர்  நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடடு வழங்க உத்தரவவிட்டது.

இந்த நிலையில்,  வட்டி வழங்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என  மத்திய அரசு சார்பில்  வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது பஞ்சாப் உயர்நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மீண்டும் மீண்டும் வாதாடிய நிலையில், பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ரஜ்பீர் சேராவத் மத்திய அரசுக்கு  நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்