₹1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹20000 வட்டி.. சென்னையில் ரூ.20000 கோடி மோசடி..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (17:33 IST)
ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தரப்படும் என்றும் முதலீடு செய்யப்படும் பணம் தங்கத்தின் முதலீடு செய்வதாகவும், கானா நாட்டில் தங்களுக்கு தங்கச் சுரங்கம் இருப்பதாகவும், எனவே தங்களிடம் முதலீடு செய்வதால் ஏராளமான வட்டி கிடைக்கும் என்றும் சென்னை வடபழனி சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூபாய் 2000 கோடி மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை வடபழனில் உள்ள பிராவிடண்ட் டிரேடிங் என்ற நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற்றது. கானா நாட்டில்  தங்களுக்கு தங்க சுரங்கம் இருப்பதாகவும் எனவே தங்களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 20000 வட்டி கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறியது. 
 
இந்த நிலையில் இந்த நிறுவனம் திடீரென முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிலையில் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத்தை தடுப்பு பிரிவு அலுவலகத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிடு புகார் அளித்தனர் 
 
இந்த புகாரின் பெயரில் விசாரணை செய்ததில் சிவ சக்திவேல் என்பவர் தான் இந்த மோசடியை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பொருளாதார குற்றத்தை தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்