ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதி..! 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு

Senthil Velan
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (15:13 IST)
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் டார்ச் லைட் அடித்து தடுத்து நிறுத்திய தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து  5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
தூத்துக்குடிக்கு கேரளாவில் இருந்து ஒரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள எஸ் வளைவுப் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரியானது எஸ் வளைவு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
அந்த நேரத்தில் நெல்லையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. ரயில் தண்டவாளத்தில் டிரக் விபத்துக்குள்ளாகி இருப்பதை புளியரை பகுதியை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மனைவி குருந்தம்மாள் ஆகியோர் பார்த்துள்ளனர்.
 
நட்டநடு இரவில் பகவதிபுரம் ரயில் நிலையத்தை நோக்கி வரும் ரயிலை நிறுத்தி விட வேண்டும் என அவர்கள் இருவரும் ஓடிச் சென்று டார்ச் லைட் அடித்து, சிக்னல் காண்பித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் மிகப்பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த தம்பதிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ALSO READ: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக ED சம்மன்.! மார்ச் 4-ல் நேரில் ஆஜராக உத்தரவு..!!
 
இந்நிலையில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த சண்முகையா மற்றும் அவரது மனைவி குருதம்மாளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்