ஜியோ, வோடோபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கட்டண உயர்வால் ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்த நிலையில், பிஎஸ்என்எல் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் 19 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதேபோல், வோடபோன் ஐடியா 14 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ சுமார் 8 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் கட்டண குறைவை அறிவித்த பிஎஸ்என்எல், கூடுதல் 30 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, மொத்தம் மொபைல் பயன்பாடு சிறிதளவு குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் 120.56 கோடியான மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜூலையில் 120.20 கோடியாக குறைந்துள்ளது.