ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியின் சொத்துகள் முடக்கம் ! அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:17 IST)
தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற ஜாபர் சேட்டின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அப்போதைய உளவுத்துறை ஐஜியான ஜாபர்சேட்டிற்கு வீட்டுவசதி வாரியம் சாப்பில் நிலம் ஒதுக்கப்பட்டது.  அதன்பின், அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, அவரது மனைவி மமற்றும் மகள் ஆகியோர் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துரை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பல்வேறு சர்ச்சைக்களில் சிக்கியிருந்த ஓய்வுவெற்ற டிஜிபி  அதிகாரி  ஜாபர் சேட்டிடம் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது,

இந்த நிலையில், ஓய்வுபெற்ற  அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகள் துர்கா சங்கர் மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவியின் ரூ.14.23 கோடி  மதிப்பிலான  சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்