லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சனி, 2 ஜூலை 2022 (15:12 IST)
லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
லாட்டரி சீட்டு மார்ட்டினின் 172 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்ட்டினுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 173 கோடி மதிப்பில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது
முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களில் வங்கி கணக்குகள் மற்றும் நிலங்களும் அடங்கும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது
மேலும் மார்ட்டினுக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள நிலங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
சட்டவிரோத பண பரிவர்த்தனை வரை வழக்கில் லாட்டரி மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது அமலாக்கத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை ஒன்று இந்த சொத்து முடக்கம் என கூறப்படுகிறது.