காஞ்சிபுரத்தில் செய்தியாளர் வெட்டிக்கொலை!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (12:09 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவ்ட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மோசஸ் அந்த பகுதியில் நடந்த குற்றச் செயல்களை அம்பலப்படுத்தி காவல் துறையினரிடம் புகார் அளித்ததால் ரௌடி கும்பல் இவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கொலை சம்மந்தமாக போலிஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் முக்கியக் குற்றவாளி ஒருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்