ரெம்டெசிவர் மருந்துகள் நிறுத்தம் !

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (22:11 IST)
தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதியுடன் ரெம்டெசிவர் மருந்துகள் வழங்கும் பணி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  இணையதளம் மூலமாகத் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் வழங்கும் பணி வரும் ஜூலை 17 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக அரிவிக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவர் மருத்திற்கான கோரிக்கைகள் குறைந்த காரணத்தால் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகிறது. இம்மருத்து தேவையெறால்  மாவட்ட மருந்துக் கிடங்குகளில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்