கரூர் அருகே போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கஜா புயலுக்கு வழங்கிய நிவராண பொருட்கள் வெறும் கண்துடைப்பிற்காக மட்டும் தான் என கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதிகளான மருதூர், பரளி, கல்லுப்பட்டி, கருங்கலாப்பட்டி, வதியம், கண்டியூர், கோட்டமேடு மற்றும் மைலாடி பகுதியில் வாழை மரங்கள் மற்றும் வயல்வெளிகள் மிகுந்த அளவில் சேதமடைந்தது.
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கரூர் எம்.எல்.ஏ வும், தமிழக போக்குவரத்து துறை அமைசருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்., கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிவராண பொருட்களை வழங்கினார்.
அதில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை அ.தி.மு.க கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது எனவும் மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சென்று முழுமையாக பார்வையிடவில்லை என்றும் சரியான மின்சார வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றும் சேதமடைந்த பயிர், வாழை போன்ற விளைப்பொருட்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை எனவும் புயலுக்குப் பின்பு பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த நிவராண பொருட்கள் வழங்கும் நிகழ்வு வெறும் கண்துடைப்பு என்றும் தங்களுடைய வேதனையை தெரிவித்தனர். மேலும், இந்நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களும், அமைச்சரும், தி.மு.க எம்.எல்.ஏ தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.