ஆட்டுக்கு 3,000, மாட்டுக்கு 30,000; கஜா இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு

ஞாயிறு, 18 நவம்பர் 2018 (10:39 IST)
பேயாட்டம் ஆடிப்போன கஜா புயலுக்கு முதலமைச்சர் இழப்பீடுகளை அறிவித்துள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. 
 
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும், வாழை மரங்களும், பனை மரங்களும் வேரோடு சாய்துள்ளன. விவசாயிகள் கஷ்டப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கஜாவால் சீரழிந்து போயுள்ளன. மீட்புப்பணிகளை மேற்கொள்ள அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இந்த கஜா புயலால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும். சேதமடைந்த 56,942 குடிசை வீடுகளும் 30,328 ஓட்டு வீடுகளை சீர் செய்ய நிவாரண உதவி வழங்கப்படும். அதேபோல் சேதாரங்கள் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்