ஓ.ராஜாவை மீண்டும் கட்சியில் சேர்த்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (11:40 IST)
ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் தேனி பகுதியில் செல்வாக்கு மிக்க பிரமுகராக வலம் வந்தார். கடந்த வாரம் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓ.ராஜா, தேர்தலில் முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதால் அவரை முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினர். 
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா நேற்று முன்தினம் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இது பலரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓ.ராஜா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஓ.ராஜா தான் செய்த தவறை உணர்ந்ததால் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் எனவும் அதைத் தாண்டி எதையும் சொல்ல முடியாது எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்